சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூரில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள இருக்கிறார். இது தொடர்பாக அக்கட்சித் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வோர் ஆண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது வழக்கம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்குள் விஜயகாந்த் சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும், அங்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலம் விஜயகாந்த் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மருத்துவப் பரிசோதனைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்
1 mins read

