ஆர்கே நகர் தேர்தல்: ஆளுக்கு ஓர் இலக்கு

ஆர்கே நகர் தேர்தல்: ஆளுக்கு ஓர் இலக்கு

1 mins read

ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடப்பில் இருப்பதால் அத் தொகுதியில் வாகனச் சோதனை கள் தீவிரமாக நடக்கின்றன. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4. தேர்தல் டிசம்பர் 21ல் நடக்கிறது. 24ல் முடிவுகள் வெளிவரும். இதனிடையே, ஆர்கே நகர் தேர்தலை வாழ்வா சாவா என்று கருதும் திராவிட கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அந்த தேர்தலுக்கான இலக்குகளை நிர்ணயித்து உள்ளன. 'இடைத்தேர்தலில் 70,000 வாக்குகள் லட்சியம்; 35,000 வாக்குகள் நிச்சயம்' என்பது அதிமுகவின் தாரக மந்திரமாக உள்ளது. அதேபோல் "அதிக பட்சம் 50,000 வாக்குகள்; குறைந்தபட்சம் 25,000 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி" என திமுக இலக்கு நிர்ணயித்து உள்ளது. ஆர்கே நகர் தொகுதியில் வேட்பாளரை பாஜக நிறுத்துமா என்பது தெரியவில்லை. பாமக, தேமுதிக கட்சிகள் போட்டி யில்லை என்று அறிவித்துவிட் டன. பல கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தத் தேர்தலில் தினகரன், தீபா ஆதரவாளர்களின் வாக்கு கள் அதிமுகவுக்குக் கிடைக் காது. ஆகையால் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுக நம்புகிறது.