காந்திநகர்: அடுத்த மாதம் 9, 14 தேதிகளில் குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு மாதங்கள் முன்பு வரை குஜராத் தேர்தலை எளிதாக ஊதித்- தள்ளிவிடலாம் என்று நினைத்தி- ருந்தது பாஜக. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருப்- பதை உணர்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பிரசார உத்தியை மாற்றி இருக்கிறார். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு ஆகியவற்றுக்கு எதிராக குஜராத்- தின் வணிக சமூகம் பொங்கி எழுந்துள்ளது. கையில் பணப் புழக்கம் இல்லை என்று கொந்தளித்தபடி உள்ளனர்.
கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கை ஓங்குவதாகக் கூறி வருகின்றன. களத்தில் நிலவரம் சூடாவதை பாஜக தலைமை உணர்ந்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து அங்கு ஆட்சியைத் தக்கவைக்க பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. அதுபோல மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் போராடி வருகிறது. மோடி மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டதால் தனது நிலை- யிலிருந்து இறங்கி வந்துள்ளார். கூப்பிய கரங்களோடு அவர் மக்களிடம் வேண்டுகோள்- விடுக்கும் படங்கள் தற்பொழுது பாஜக சமூக தகவல் தொடர்பு பிரிவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

