தானே: தனது ஒரே மகன் ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து முஸ்லிம் மதத் தலைவராகி- விட்டதால் அனைத் துலக பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் விரக்தியில் இருப்பதாக அவரு- டைய தம்பி இக்பால் கஸ்கர் காவல்துறை விசாரணை யில் தெரிவித்துள்ளான். மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்தவன் தாவூத் இப்ராகிம் கஸ்கர். 1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி ஆனான். இந்தக் குண்டு வெடிப்புக்குப் பின்னர் அவன் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிவிட்டான். அங்கிருந்தபடி நிழல் உலக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறான். அவனுக்குப் பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு உளவுத் துறையும் பாதுகாப்பு அளித்து வருகின்றன. முறைகேடாக சம்பாதித்த பணத்தில் அவன் உலகம் முழுவதும் சொத்துக்களை வாங்கி குவித்து பெரும் சாம்ராஜ்யத்தையே நடத்தி வரு கி றான்.
விரக்தியில் தாவூத் இப்ராகிம்
1 mins read

