சாட்னா: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரகசியமாக இரும்புப் பொருட்களைச் சாப்பிட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து 5 கிலோ எடை கொண்ட இரும்புப் பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். சாத்னா மாவட்டம், சோஹாவாலை சேர்ந்தவர் முகமது மக்சூட் (32). இவருக்குக் கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்- பட்டார். அந்த இளைஞரின் உடலை மருத்துவர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் வயிற்றில் சில பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டன. இளைஞர் முகமதுவுக்கு 6 மருத்துவர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்தது. அவரது வயிற்றிலிருந்து 10=12 ஷேவிங் பிளேடுகள், 4 பெரிய ஊசிகள், 1 சங்கிலி, 263 நாணயங்கள், கண்ணாடித் துண்டு களை மருத்துவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை அகற்றினர். இதுகுறித்து அந்த இளைஞ- ருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பிரியங்கா சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்து 5 கிலோ இரும்புப் பொருட்கள் அகற்றப்- பட்டன.
வயிற்றில் இருந்த இரும்புப் பொருட்கள். படம்: ஊடகம்

