நீதிமன்ற உத்தரவு இருந்தால் சசிகலாவை விசாரிக்கலாம்

நீதிமன்ற உத்தரவு இருந்தால் சசிகலாவை விசாரிக்கலாம்

1 mins read

தமிழகத்தில் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரி சோதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் சோமசேகருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், வரி ஏய்ப்பு தொடர்பாக சிறையில் தண்டனைக் கைதியாக உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனுமதி வழங்குமாறும் கூறப்பட்டு இருந்தது. இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சோமசேகர் தனது மேல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு "உச்ச நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் நீதிமன்றம் அனுமதி வழங்கினால் மட்டுமே சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியும்," என்று மறுத்துவிட்டார்.