சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரத்திற்கும் இடையேயான மோதல் வலுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ப.சிதம்பரம் பங்கேற்று உரையாற்றினார். ஆனால் கருத்தரங்குக்கு தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசரோ, நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை. எனினும் அதைப் பொருட்படுத்தாத ப.சிதம்பரம், நிகழ்வில் பேசும்போது, காங்கிரஸ் கட்சி நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டதாகக் கூறினார். "இந்தச் சரிவை ஈடுகட்ட வேண்டும் என்றால், எல்லா வித மான கருவிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். மக்களை திரட்டாவிடில், பாஜக வெற்றி பெற்றுவிடும்," என்றார் சிதம்பரம்.
வெடித்தது மோதல்: ப.சிதம்பரத்தை புறக்கணித்த திருநாவுக்கரசர்
1 mins read

