அன்புச்செழியன் தொடர்ந்து தலைமறைவு: நண்பர் சிக்கினார்

அன்புச்செழியன் தொடர்ந்து தலைமறைவு: நண்பர் சிக்கினார்

1 mins read

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனைக் கைது செய்ய தமிழக போலிசார் வலைவீசியுள்ள நிலையில், அவரது நெருங்கிய நண்பரான முத்துக்குமார் போலிசில் சிக்கியுள்ளார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலிசார் விசாரித்து வருவதாகத் தெரிகிறது. முத்துக்குமார் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அன்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழ்த் திரையுலகத்தினர் அணிவகுத்துள்ளனர்.