சென்னை: தமிழகத்தில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. நேற்று மாநிலம் முழுவதும் 33 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. சென்னையில் 21 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 12 இடங் களிலும் வருமான வரி சோதனை நடந்தது. இதனால் அரசியல் வட்டாரங்களில் மீண் டும் பரபரப்பு நிலவியது. சென்னையில், பிரபல மார்க் குழுமம், கங்கா குழுமம் ஆகிய வற்றுடன் தொடர்புடைய இடங் கள், ஸ்பெக்ட்ரம் மால் திரையரங்கு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த நவம்பர் 9ஆம் தேதி சசிகலா குடும்பத்தினரை குறி வைத்து தமிழகம் முழுவதும் 189 இடங்களில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தினர். அப் போது, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த விவேக்கின் ஜாஸ் சினி மாஸ், அவர் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட இடங்களி லும் 5 நாள் சோதனை நடந்தது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையி லேயே நேற்றைய சோதனை நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. பெரும்பாலும் கட்டு மான துறையுடன் தொடர்புள்ள இடங்களையே அதிகாரிகள் குறி வைத்து சோதனையிட்டதாகக் கூறப்படுகிறது.

