ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 8 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் சுங்கப் பிரிவு அதிகாரிக ளால் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவர் கைதானார். ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் பகுதிக்கு இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக கிடைத்த தகலைய டுத்து அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, தொண்டியைச் சேர்ந்த ராவுத்தர் என்பவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடினார். இதையடுத்து அவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, ராவுத்தரின் கையில் இருந்த பையில் 2 கிலோ தங்கமும், அவர் தன் இடுப்பைச் சுற்றி சுமார் 6 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
எட்டு கிலோ தங்கம் பறிமுதல்
1 mins read

