தூத்துக்குடி: கரை ஒதுங்கிய 50 டால்ஃபின்கள்

தூத்துக்குடி: கரை ஒதுங்கிய 50 டால்ஃபின்கள்

1 mins read
9fcab5f3-8aa8-4ba5-8004-f0a5e290e6bc
-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந் தூர் அருகே 50 டால்ஃபின்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 8 டால்ஃபின்கள் மாண்டன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருச்செந்தூரை அடுத்த புன் னைக்காயல் தூண்டில் பாலம் அரு கில் பல டால்ஃபின்கள் உயிரோடு நேற்று கரையொதுங்கின. உள்ளூர் மீனவர்களும் இளையர்களும் அவற் றைக் கொண்டு சென்று ஆழ்கடலுக் குள் விட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் 8 டால்ஃபின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இது குறித்து மாவட்ட வருவாய், வனம், மீன் வளத்துறை மற்றும் கடல் மீன் ஆராய்சித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மயங்கிக் கிடந்த டால்ஃபின்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம்