சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விரைவில் 11 பெண் நீதிபதிகள் நியமிக்கப்படவிருக்கிறார்கள். அந்த நீதிமன்றத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் இது வரையில் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் நீதிபதி கள் நியமிக்கப்பட்டதில்லை. சென்னை உயர்நீதிமன்றத் துக்கு ஆறு நீதிபதிகள் நியமிக்கப் படுவதாக இந்தியாவின் மத்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அவர்களில் நான்கு பேர் மாதர்கள். சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கெனவே ஏழு பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் ஒரு பெண் தான். இந்திரா பானர்ஜி என்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் பொறுப் பேற்றுக்கொண்டு இருக்கிறார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு நீதிபதிகளும் பதவி ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 60 நீதிபதிகள் இருப்பார்கள்.
அந்த நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியாற்றலாம் என்று அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. எஸ் ராமதிலகம், ஆர் தரணி, ஆர் ஹேமலதா, டி கிருஷ்ணவள்ளி ஆகிய நால்வரும் புதிதாக நிய மிக்கப்பட்டிருக்கும் பெண் நீதி பதிகளாவர். இவர்களில் ராமதிலகம் இப்போது புதுச்சேரியில் தலைமை நீதிபதியாக இருக்கிறார். மதுரை மாவட்ட முதன்மை மாவட்ட நீதி பதியாக இருப்பவர் தரணி. மதுரையில் மக்கள் நீதிமன்ற நிரந்தர தலைவராக இருப்பவர் கிருஷ்ணவள்ளி. ஹேமலதா கரூர் மாவட்ட நீதிபதியாக இப் போது பணியாற்றுகிறார்.

