ஏழ்மை காரணமாக யாசகம் கேட்பது குற்றமாகாது என்று இந்திய அரசாங்கம் டெல்லி உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. தலைநகரான புதுடெல்லியில் யாசகம் கேட்டு வாழ்க்கை நடத்து வோருக்கு மனிதாபிமான மற்றும் அடிப்படை உரிமைகள் வேண்டும் என்று இரண்டு பொதுநல வழக்கு கள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் விசார ணைக்கு வந்தபோது மத்திய அரசாங்கம் தன்னுடைய நிலையை எடுத்துக் கூறியது. யாராவது கட்டாயத்தின் காரணமாக அல்லது விருப்பத்தின் பேரில் தலைநகரில் யாசகம் கேட்டு பிழைக்கிறார்களா என்று நீதிமன் றம் கேட்டபோது மத்திய அரசு இவ்வாறு பதிலளித்தது. இந்தியாவில் யாசகர்கள் சட்டத்தில் மாற்றம் செய்யவேண்டு மானால் மாநில அரசாங்கங்களின் உதவியுடன்தான் செய்யமுடியும் என்றும் அரசாங்கம் விளக்கியது.
இந்திய அரசு: ஏழ்மை எனில் யாசகம் கேட்பதில் தவறில்லை
1 mins read

