குட்டி மருத்துவ வாகனம் நெரிசலில் சிக்காது

குட்டி மருத்துவ வாகனம் நெரிசலில் சிக்காது

1 mins read

இந்தியாவின் புனே நகரில் முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவர் புதிதாக தொடங்கியிருக்கும் ஒரு நிறுவனம், குட்டி மருத்துவ வாகனம் (ஆம்புலன்ஸ்) ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த வாகனத்தில் ஒரே ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வேக மாக போகமுடியும். இந்த வாக னத்தை இருசக்கர வாகனத்தில் பொருத்தி இழுத்துச்செல்ல முடியும். கூட்டம் மிகுந்த இடங்களிலும் கிராமப் பகுதிகளிலும் மலைபாங்கான இடங்களிலும் நோயாளியை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பதற்கு இந்த வாக னம் மிகவும் வசதியானது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆம்புபோட் (AmbuPod) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த வாகனம் சூரியசக்தியால் இயங்கு கிறது. இதில் உள்ள சாதனங்களைக் கொண்டு தற்காலிகக் கூடாரத்தை அமைத்து யாருக்கும் வெளி நோயாளி சிகிச்சை அளிக்கலாம். பிரசவமும் பார்க்கலாம்.