சென்னை: தமிழகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றக் கிளை தனது உத்தர வில் தெரிவித்துள்ளது. எனினும், தற்போது இயங்கி வரும் மணல் குவாரிகளை மூட ஆறு மாத அவகாசம் அளிக்கப்பட் டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவை பல்வேறு தரப்பி னரும் வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் ஏராளமான முறை கேடுகள் நடப்பதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுகின்றன.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேலாக மணல் அள்ளப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகி னார்.

