சென்னை: செய்தியாளர்கள் சிலரிடம் தாம் சில கேள்விக் கணைகளைத் தொடுக்க வேண்டியுள்ள தாக இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கூறியுள்ளார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், தாம் கேள்வி கேட்கப் போவது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக் கில் சிக்கி பெங்களூருவில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் இளவரசி. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சசிகலா தரப்பினரை மட்டுமே குறிவைத்து தமிழகத்தில் ஏராளமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கை மேற் கொண்டது.
அந்தச் சோதனை நடவடிக்கையில் சிக்கியவர்களில் கிருஷ்ணப்ரியாவும் ஒருவர். தற்போது அவர் ஊடகவியலாளர்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். "கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிகை மற்றும் ஊடக தர்மத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் சில செய்தியாளர்களிடம் நான் அவசியம் சில கேள்விக் கணைகளைத் தொடுக்க வேண்டும்.. தொடுப்பேன்," என்று கிருஷ்ணப்பிரியா சமூக வலைத்தளப் பக்கத் தில் பதிவிட்டுள்ளார்.

