மதுக்கடை திறக்க எதிர்ப்பு: பாடை கட்டி போராடிய பொதுமக்கள்

மதுக்கடை திறக்க எதிர்ப்பு: பாடை கட்டி போராடிய பொதுமக்கள்

1 mins read
dcc032be-1d5f-41ad-b094-cf6f8f774f85
-

சிவகங்கை: புதிய மதுக்கடையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், பாடையுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர் (படம்). சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் புதிய மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து விரைவில் திறக்கப்பட உள்ள புதிய மதுக்கடை முன்பு பொதுமக்கள் பாடையுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாடையைத் தூக்கிக்கொண்டு வீதிவீதியாகச் சென்றனர். அப்போது டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். கடையை அகற்றக்கோரி சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்று சேர்ந்து அடுத்தக்கட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.