சென்னை: கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூ பித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மூதாட்டி செல்லத்தாய். இவர் 67 வயதில் எம்ஏ பட்ட மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் செல் லத்தாய் கண்காணிப்பாளராகப் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற வேண்டும் என்பது இவரது சிறு வயது கனவு. எனினும் இவரது தந்தை கல்லூரி செல்ல அனுமதிக்கவில்லை. திருமணத்துக்குப் பிறகு கணவ ரும் எதிர்த்துள்ளார். பின்னாட்க ளில் பெற்ற மகள்களும் கூட செல்லத்தாயை இவ்விஷயத்தில் ஆதரிக்க முன்வரவில்லை.
"யாருக்கும் தெரியாமல் தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழக எம்ஏ படிப்புக்கு விண்ணப்பித் தேன். வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு தனியாக உட்கார்ந்து படிப் பேன். கடந்த 2014ல் கணவர் காலமான பிறகும் படிப்பை கைவிடவில்லை. இதனால் மகள்களின் எதிர்ப்பை சம்பாதித்தேன். எப்படியோ பட்டம் பெற்றுவிட்டேன். அடுத்து சட்டம் பயில்வேன்," என்கிறார் செல்லத்தாய். எப்படியாவது மீண்டும் தன் மகள்களின் அன்பை வென்றெ டுத்து, அவர்களுடன் இணைந்து வாழ வேண்டுமென நெகிழ்கிறார் கல்வியில் சாதித்த மூதாட்டி.
பட்டம் பெறும் செல்லத்தாய். படம்: தகவல் ஊடகம்

