கல்வித்துறையில் நல்லது நடக்கிறது: திருப்தி தெரிவிக்கும் அன்புமணி

கல்வித்துறையில் நல்லது நடக்கிறது: திருப்தி தெரிவிக்கும் அன்புமணி

1 mins read

சென்னை: கல்வித்துறையில் தற்போது ஒரு நல்லது நடப்பதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வரைவு பாடத்திட்ட அறிக்கையில் தங்கள் தரப்பு கருத்தையும் சேர்க்க வேண்டும் என பாமக கோரியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி செயலரிடம் மனு அளித்துள்ளார் அன்புமணி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டத்திட்டத்தின் அடிப்படையில், பாமகவின் பரிந்துரைகளை அரசிடம் கொடுத்திருப்பதாகவும், தனியார் பள்ளிகளை விட்டு மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு செல்லும் அளவுக்கு தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.