மோடி: பெண்கள் சக்தியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம்

மோடி: பெண்கள் சக்தியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம்

2 mins read
06a99822-7c0b-48e0-8ceb-6fba0c2b9243
-

ஹைதராபாத்: பெண்கள் சக்தி யின் மறு அவதாரம் என்று குறிப் பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, அதற்கு உதாரணமாக சாய்னா நேவால், பி.வி.சிந்து, சானியா மிர்ஸாவை சுட்டிக்காட்டினார். பெண்களின் மேம்பாடு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று தான் நம்புவதாகவும் கூறினார். மூன்று நாட்கள் நடைபெறும் 8வது உலகத் தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் செவ்வாய் மாலை தொடங்கியது. இந்த மாநாட்டில் 127 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனை வோர்களும் 300 முதலீட் டாளர்களும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் மகளும் அதிபரின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப் பாளராக பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் உரையாற்றிய மோடி, தொழில் முனைவோர்கள் தாங்கள் தொடங்கும் செயல்களில் பாதக, சாதகமான வாய்ப்புகளைக் கண்டறிந்து, எதிர் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் எடுத்துக் கொண்ட வேலையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். முதலிடத்தில் மகளிர், அனை வருக்கும் வளமான வாழ்க்கை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப் பட்டது.

தெலுங்கானாவில் உலக தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் மகள் இவான்கா டிரம்ப், ஹைதராபாத் பிரியாணியை வெகுவாக பாராட்டிப் பேசினார். "பழமை வாய்ந்த ஹைதராபாத் நகரம் தற்போது தொழில்நுட்பத்தால் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது அற்புதமானது. தற்போது இங்குள்ள தொழில்நுட்ப மையங்களை விடவும் உங்களது உலகப் புகழ்பெற்ற பிரியாணி அவற்றை மிஞ்சி விடும் அளவுக்கு சுவையாக உள்ளது," என்றார் இவான்கா. படம்: ஏஎஃப்பி