திருவண்ணாமலை: சிறப்பாக நடந்தேறிய தேரோட்டம்

திருவண்ணாமலை: சிறப்பாக நடந்தேறிய தேரோட்டம்

1 mins read
a411d4bb-bfbe-499e-b9ec-8a22905fef82
-

திருவண்ணாமலை, அண்ணா மலையார் கோவில் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ் வான மகா தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். டிசம்பர் 2ஆம் தேதியன்று காலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள மகா தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் கோவில் 16 கால் மண்டபம் எதிரில் இருந்து தொடங்கியது தேரோட்டம். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். படம்: ஊடகம்