சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென்கிழக்குத் திசையில் குமரிக் கடல் பகுதி நோக்கி நகர்ந் தது. அது மேலும் தீவிர மடைந்து காற்றழுத்த மண்டலமாகி புயலாக மாறும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று அதிகாலை குமரிக் கடலில் புயல் சின்னம் உரு வானது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இலங்கையின் காலே நகரில் இருந்து 185 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரி- யில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கில் 210 கி.மீ. தொலை- விலும் மையம் கொண்டு இருந் தது.
தீவிர புயலாக மாறி கன்னியா- குமரியை நோக்கி நெருங்கி வருகிறது. தற்போது 70 கி.மீ. தொலைவில் குமரிக் கடல் பகுதி யில் நிலைகொண்டுள்ளது. அது 20 கி.மீ.வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் லட்சத்தீவு நோக்கி மெதுவாக நகரும் என வானிலை மையம் அறிவித்தது. குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறைக் காற்- றுடன் பலத்த மழை பெய்து வரு- கிறது. சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்தன. நாகர்கோவிலில் மின்சார டிரான்ஸ்பார்மரும் காற்றின் வேகத் திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தது. மாவட்டம் முழு வதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் சேதமடைந்தன.