ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

1 mins read

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்ப- தில் இருந்து வந்த இழுபறிக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மதுசூதனனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. ஆட்சிமன்றக் குழு கூடி வேட்பாளரை முடிவுசெய்யும் என ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், ஆட்சிமன்றக்குழு மது சூதனனை வேட்பாளராக அறிவித் துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்) அணியில் வேட்பாளராகப் போட்டியிட் ட வர் மதுசூதனன், எடப்பாடி பழனிச்சாமி (ஈபிஎஸ்) அணியில் தினகரன் போட்டியிட்டார்.

தேர்தல் தடை செய்யப்பட்டவுடன் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்தன. இரண்டு அணிகளும் இணைந் தாலும் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் களுக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது அவர்களின் குறையாக இருந்தது. இந்நிலையில் மதுசூதனன் பெயர் மீண்டும் அறிவிக்கப்பட்ட தால் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் மீது நம்பிக்கை பிறந்துள்ள தாகக் கூறப்படுகிறது.2017-12-01 06:00:00 +0800