சென்னை: மேலாளர்கள் இருவர் கைதான நிலையில், நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருந்த தமது முன்பிணை மனுவை திரும்பப் பெற்றுள்ளார் பைனான்சியர் அன்புச்செழியன். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் அவரை காவல் துறை தீவிரமாகத் தேடி வருகிறது. பிரபல நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் மர ணத்தை அடுத்து, அன்புச்செழி யன் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் திரையுலகப் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின் றனர். இதனால் தமிழ்த் திரை யுலகில் சலசலப்பு நிலவி வருகிறது. படத் தயாரிப்புக்காக தன் னிடம் கடன் வாங்கிய அசோக்குமாரிடம், அன்புச்செழி யன் கந்துவட்டி வசூலித்தார் என்பது புகார். வட்டி கொடுக்க இயலாத நிலையில், அன்புச் செழியன் ஏற்படுத்திய நெருக் கடி காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வதாக அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து அவர் உயிரிழந்த நிலையில், அன்புச்செழியன் மீதான பிடி மேலும் இறுகி வருகிறது.
இரு மேலாளர்கள் கைது: பதுங்கும் அன்புச்செழியன்
1 mins read
-

