புதுடெல்லி: இந்தியாவின் இப் போதைய பிரதமர் மோடியைப் பிடிக்கும். ஆனால் டாக்டர் மன்மோகன் சிங் எனது சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா. இப்படி மன்மோகனை ஒபாமா புகழ்ந்து பேசுவது இது முதல் முறையல்ல. பிரதமர் மோடி தொடர்பான ஒரு கேள்விக்குப் பதிலளித்த ஒபாமா, "எனக்கு மோடியைப் பிடிக்கும். நாட்டின் எதிர்காலம் குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு தொலைநோக்கு பார்வையும் கண் ணோட்டமும் உள்ளது. பலவற் றையும் அவர் நவீனப்படுத்தி வருகிறார். ஆனால் அதே வேளையில் நானும் மன்மோகன் சிங்கும் சிறந்த நண்பர்கள்," என்று கூறினார். புதுடெல்லியில் பிரபல ஆங்கில ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் நடத்திவரும் உச்சநிலை மாநாட் டின் 2வது நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார் ஒபாமா.
4 நகரங்களை இணைக்கும் ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு தீவிரம்
1 mins read

