திருமணம் செய்வதாகக் கூறி மணமகள் குடும்பம் ரூ.6 லட்சம் மோசடி

திருமணம் செய்வதாகக் கூறி மணமகள் குடும்பம் ரூ.6 லட்சம் மோசடி

1 mins read

கிரேட்டர் நொய்டாவில் திருமணம் செய்வதாகக் கூறி மணமகன் குடும்பத்தினரிடம் ரூ.6 லட்சம் ரொக்கம், தங்க, நகைகளைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக மணமகள் வீட்டினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கிரேட்டர் நொய்டா, லட்பூரா கிராமத்தைச் சேர்ந்தவர் அனில். இவருக்கும் தாத்ரி யின் கடேஹ்ரா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திரு மணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் தாங்கள் திருமணச் செலவு களை ஏற்கமுடியாத நிலையில் இருப்பதாகக் கூறினர்.

இதனால் திருமணச் செலவை தாங்களே ஏற்பதாக அனில் குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து, திருமணப் பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் முடிந்த நிலையில் நவம்பர் 21ஆம் தேதி ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும், திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்காக மணப்பெண் வீட்டாரிடம் மணமகன் வீட்டார் ரூ.6 லட்சம் பணம், 10 பவுன் தங்க நகை, வெள்ளி நகைகளைக் கொடுத்தனர். திருமணம் 27ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், திருமண நாளன்று மணமகளை அழைத்து வருவதற்காக அவரது வீட்டுக்கு மணமகன் வீட்டார் சென்றனர். அப்போது, வீட்டின் கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.