உலகெங்கும் தமிழ் வளர், தமிழ் பண்பாட்டு மையங்கள்: அரசு முடிவு

உலகெங்கும் தமிழ் வளர், தமிழ் பண்பாட்டு மையங்கள்: அரசு முடிவு

1 mins read

டர்பன்: அயல் நாடுகளில் வசிக் கும் இந்தியர்களில் 52 விழுக்காட் டினர் தமிழர்கள் என்று தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண் பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், உலகம் முழுவதும் 155 நாடுகளில் 9.81 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எனவே தமிழர்களுக்காக தனியே ஒரு மூலதன அமைப்பு தொடங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்த மாநாடு தொடக்க மாக அமைய வேண்டும் என்றும் தெரிவித்த அவர், உலகத் தமிழர் களுக்காக தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும் என்றார். இந்த மாநாட்டில் டர்பன் அரசர் ஸ்வெதிலினி, மொரீ‌ஷியஸ் நாட் டின் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இந்தியா, சிங் கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடு கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள், வர்த் தக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.