காவிரி விவகாரம்: தமிழக அரசுக்கு அனுமதி மறுப்பு

காவிரி விவகாரம்: தமிழக அரசுக்கு அனுமதி மறுப்பு

1 mins read

புதுடெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு புதிய இடைக் கால மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மீண்டும் அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்துக்கு இந்தாண்டு இதுவரை வழங்க வேண்டிய 63 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை. இதை வலியுறுத்தி இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில் எந்தப் புதிய மனுவையும் விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கைவிரித்துள்ளது.