லக்னோ: உத்தரப்பிரதேச உள் ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி செய்துள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள் ளார். உத்தரப்பிரதேசத்தில் உள் ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சி களை பாஜக கைப்பற்றியது. இதுபோல நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றிலும் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக முதலிடத்தையும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் 2வது இடத்தையும் பிடித்தன. சமாஜ்வாடி கட்சிக்கும் காங் கிரஸ் கட்சிக்கும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், "மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களில் முறைகேடுகளைச் செய்து இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது," என்று சாடியுள்ளார்.

