புதுடெல்லி: ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்தியாவுக்கு எதிராக அனைத் துலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக அரசு தர வேண்டிய ஊக்கத்தொகை உட்பட 5,000 கோடி ரூபாய் கேட்டு அந்நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது என்று இந்திய ஊடகம் ஒன்று தெரி வித்தது. நிசான் நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் 'ரெனால்ட்' நிறுவனத் துடன் இணைந்து சென்னையை அடுத்துள்ள ஒரகடத்தில் கார் தயாரிப்புத் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்காக, 2008ல் தமிழக அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்யப் பட்டது.
அப்போது, கார் தயாரிப்புக்கு ஊக்கத் தொகை வழங்குவதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் 2015ஆம் ஆண்டிலிருந்து தர வேண்டிய ஊக்கத் தொகையைத் தமிழக அரசு இன்னமும் அளிக்கவில்லை என்று நிசான் நிறுவனம் தற்போது புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த அதிகாரி ஒருவர், ஒர கடத்தில் ரெனால்ட்-நிசான் தொழிற்சாலை, 6,100 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப் பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 4.8 லட்சம் வாகனங்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலை மூலம் 40,000 பேருக்கு வேலை கிடைத் துள்ளது.

