லஞ்சம்: பத்திரப் பதிவாளர் சிக்கினார்

லஞ்சம்: பத்திரப் பதிவாளர் சிக்கினார்

1 mins read

ஈரோடு: லஞ்சம் பெற்ற பெண் சார்பதிவாளர் அமுதா மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வெளியே லஞ்சம் பெற்றபோது அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். அலுவலக வாயிற்பகுதியில் அமுதா நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஆடவர் ஒருவர், லஞ்சப் பணத்தை அளித்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலிசார் அவரை சுற்றி வளைத்தனர். இதையடுத்து சார்பதிவாளர் அலுவலகத்தை பூட்டி, சோதனை மேற்கொண்ட போலிசார், சார்பதிவாளர் அமுதா மற்றும் அலுவலக ஊழியர்களிடம் இரவு 12.50 மணி வரை விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக அமுதா உட்பட யாரையும் போலிசார் இதுவரை கைது செய்யவில்லை.