கன்னியாகுமரியில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி

கன்னியாகுமரியில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி

1 mins read
a6206548-77f6-444e-ad5d-61db2455ff7e
-

திருச்சி: புயல், கனமழையால் தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அவற்றைச் சீரமைப்பதில் அரசு எந்திரம் போதிய வேகம் காட்டவில்லை என்று பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், தமிழக அரசு மீட்புப் பணிகளை வேகப்படுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களை ஒப்பிடும் போது இப்போது பெய்துள்ள மழையின் அளவு மிகவும் குறைவு என்றாலும் கூட, அதிக பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ள அவர், மழை நீர் வெளியேறுவதற்கான இயற்கை கால்வாய்கள் தூர்வாரப்படாததே இத்தகைய நிலைக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

"குமரி மாவட்டத்தில் பல்லா யிரக்கணக்கான மரங்கள் விழுந்த தாலும், வெள்ளத்தாலும் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. "அதன் தொடர் விளைவாக தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஊர் முழுவதும் வெள்ளநீர் ஓடும் நிலையில் வீடுகளில் குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்ற னர்," என அன்புமணி கவலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தான் இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திருநெல்வேலி, தூத்துக் குடி மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுவதாகக் கூறியுள்ளார்.