சென்னை: தேர்தலில் போட்டி யிடுவது தமக்குப் புதிதல்ல என் றும், கல்லூரியில் படித்த காலத் திலேயே கல்லூரி மாணவர் தேர் தல்களில் போட்டியிட்டுள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்க உள்ள அவர் செய்தியாளர்களிடம் தமது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். அப்போது, நடிகர் சங்கத் தேர்தல், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களை அடுத்து ஆர்கே நகரிலும் தமக்கு வெற்றி கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். "ஆர்கே நகருக்கு நான் வெளி ஆள் அல்ல. கடந்த 2015இல் வெள்ளம் வந்த போதும், வர்தா புயலின் போதும் இங்கு முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண் டேன்.
மக்கள் நிச்சயம் அதை மறந்து இருக்க மாட்டார்கள். நான் அடிமட்டத்தில் இருந்து பணி யாற்றுவேன். "தேர்தல் களம் காண்பது குறித்து ரஜினி, கமல் உட்பட யாரிடமும் கலந்து ஆலோசிக்க வில்லை. இது நான் சுயமாக எடுத்த முடிவு. ஆர்கே நகர் தொகுதியில் தற் போது நிலவும் அரசியல் கொந்த ளிப்பான சூழ்நிலையே தம்மை அரசியல் களம்காண தூண்டிய தாகத் தெரிவித்த விஷால், மக்கள் பிரச்சினைக்காகவே தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறினார். "நான் மக்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்கிறேன். எந்தக் கட்சிக்கும் எதிராகப் போட்டியிட வில்லை. "திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். அதன் பிறகு அனைத்து விவரங்களையும் சொல்வேன். இப்போது தேர்தலில் வெல்ல வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள்," என்று விஷால் மேலும் தெரிவித்தார்.

