மருத்துவர்களின் சிபாரிசுக்கு 'கமிஷன்'; பெங்களூரில் ரூ.100 கோடி கறுப்புப்பணம்

மருத்துவர்களின் சிபாரிசுக்கு 'கமிஷன்'; பெங்களூரில் ரூ.100 கோடி கறுப்புப்பணம்

1 mins read

பெங்களூரு நகரில் மருத்துவ சோதனை நிலையங்களும் மருத்து வர்களும் இணைந்து பதுக்கிய ரூ.100 கோடி (சுமார் S$21 மில் லியன்) கறுப்புப்பணத்தை வரு மான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பரிசோதனை நிலையங்க ளுக்குச் சிபாரிசு செய்யும் மருத் துவர்களுக்கு தரகுப் பணம் (கமிஷன்) வழங்கப்பட்டு வருவ தையும் அதிகாரிகள் கண்டுபிடித் துள்ளனர். 'எம்ஆர்ஐ ஸ்கேன்' பரிசோ தனைக்குப் பரிந்துரைத்தால் 35% 'சிடிஸ்கேன்' பரிசோதனைக்குப் பரிந்துரைத்தால் 20% என மருத் துவர்களுக்கு கமிஷன் வழங்கப் படுவதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக, நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை நாடி வரும் நோயாளிகளை கமிஷன் பெறும் நோக்கத்தோடு சில குறிப் பிட்ட பரிசோதனை நிலையங்க ளுக்கு மருத்துவர்கள் அனுப்பி வரும் தகவல் வருமான வரித் துறைக்குச் சென்றது.

அதனைத் தொடர்ந்து பெங் களூரு நகரில் உள்ள இரு கருத் தரிப்புச் சோதனை மையங்களிலும் ஐந்து உடல் பரிசோதனை நிலை யங்களிலும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்த மூன்று நாள் சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத 1.4 கோடி ரூபாய் ரொக்கப் பணமும் 3.5 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. வெளிநாட்டுப் பணமும் வெளி நாட்டு வங்கிக் கணக்குகளும் அதிகாரிகள்வசம் சிக்கின. அதனைத் தொடர்ந்து விசாரணை வளையம் விரிவாக்கப்பட்டு சோத னையிட்டபோது பல்வேறு மருத் துவப் பரிசோதனை நிலையங் களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் இருப்பது தெரிய வந்தது.