ஆட்சியரை ஒருமையில் குறிப்பிட்ட முன்னாள் எம்எல்ஏ கைது

ஆட்சியரை ஒருமையில் குறிப்பிட்ட முன்னாள் எம்எல்ஏ கைது

1 mins read

அரியலூர்: பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நல்லமுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் லெட்சுமி பிரபா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்குச் சென்றிருந்தார். அங்கு தாம் முன்பே அளித்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நல்லமுத்து சுட்டிக்காட்ட அவருக்கும் ஆட்சியருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. அப்போது நல்லமுத்து கடும் கோபத்தில் ஆட்சியரை ஒருமையில் குறிப் பிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் கைதானார்.