சென்னை: வங்கக் கடலில் உரு வாகியுள்ள புதிய புயல் சின்ன மானது வரும் 7ஆம் தேதியன்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும் வேளையில் தமி ழகத்திலும் புதுவையிலும் பலத்த மழை பெய்யும் என்றும் அம்மையம் தகவல் வெளியிட்டுள்ளது. புயல் நகரும்போது கடல் சீற்றம் ஏற்படும் என்றும் இதன் காரணமாக தமிழக, புதுவை மீனவர்கள் இன்று முதல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய புயல் சின்னம் சென் னையை நோக்கி நகரும் என்றும் அச்சமயம் தொடர்ந்து 4 நாட்க ளுக்கு கனமழை சென்னையைப் புரட்டிப் போடும் என்றும் முதலில் தகவல் வெளியானது. இதனால் சென்னை மக்கள் பீதியடைந்தனர். எனினும் புதிய புயல் சின்னத் தால் சென்னை மாநகருக்கு அதிக பாதிப்புகள் இருக்காது எனத் தெரியவந்துள்ளது. புயல் சின்னம் ஆந்திரா, ஒடிசா கடற் பகுதியை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் அவ்விரு மாநிலங்களில் தான் பாதிப்பு அதி கரிக்கும் எனக் கூறப்படுகிறது.

