ஆர்கே நகர் பிரசாரத்தைத் தொடங்கினார் விஷால்

ஆர்கே நகர் பிரசாரத்தைத் தொடங்கினார் விஷால்

1 mins read
e5493845-9c29-4f08-a4ae-296d7ee5405b
-

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த கையோடு தனது பிரசாரத்தை துவக்கி உள்ளார் நடிகர் விஷால். அவர் தனக்கு விசில் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் தினகரன் தொப்பி சின்னம் கேட்டுள்ளதாகவும் அது கிடைக் காது எனில் விசில், கிரிக்கெட் மட்டை போன்ற வேறு சின்னம் தருமாறு கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை மெரீனாவில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் விஷால் மரியாதை செலுத்தினார். பின்னர் ஆர்கே நகருக்கு தமது ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். படம்: சதீஷ்