காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல்செய்தார். வேறு யாரும் அவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்யாததால் கட்சி யின் தலைவராக அவர் பதவி ஏற்பார் என நேற்று கூறப்பட்டது. 2013ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்துவந்த ராகுல் காந்தி விரைவில் அக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற் கொண்ட ராகுல் காந்தி, அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். பல மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியையே சந்தித்து வந்தது. அதனை அடுத்து 'ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக் குத் தகுதியானவர்தானா?' என்ற விமர்சனங்கள் எழுந்தன.
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி
1 mins read
-

