தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்புமணி: இடைத்தேர்தல் அல்ல; நடப்பது எடைத்தேர்தல்

1 mins read

வந்தவாசி: ஆர்கே நகர் தொகுதியில் நடப்பது இடைத்தேர்தல் அல்ல என்றும் அது 'எடைத் தேர்தல்' என்றும் பாமக இளையரணித் தலைவர் அன்புமணி விமர் சித்துள்ளார். வந்தவாசியில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், முன்பு ஆர்கே நகரில் வாக்களிக்க பணம் வழங்கிய விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். முன்பு போட்டியிட்டவர் களே இப்போதும் போட்டி யிடுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், வாக்குரிமை பெற்ற எவரும் அரசியலுக்கு வரலாம் என்றார். "முன்பு ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களே மீண்டும் போட்டியிடுகின் றனர்.

அப்படியானால் தேர் தல் எப்படி நியாயமாக நடக் கும்? இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித் துக் கொள்கிறேன்," என்றார் அன்புமணி. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண நடவடிக்கைக்கு தமிழக அரசு ரூ.25 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதே சமயம் ரூ.500 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக விமர்சித்தார்.