குமரி: புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் சரிவர நடைபெறவில்லை எனத் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். குமரியில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், அம்மாவட்டத்துக்குப் போதுமான நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றார். "புயல் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 29ஆம் தேதியே முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது தவறு. கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் இன்னும் கூட மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கின்றனர்," என்றார் ஸ்டாலின்.
ஸ்டாலின்: புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
1 mins read

