அராஜகத்திலிருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள்: விஷால்

அராஜகத்திலிருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள்: விஷால்

1 mins read

சென்னை: அராஜகத்திலிருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள் என்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார் விஷால். முதலில் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையமும் வேட்புமனு நிராகரிப்பைப் பொறுத்தவரை தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது எனத் தெரி வித் திருக்கிறது. இந்த அறிவிப்பு குறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் "ஜனநாயகம் அதன் தலையை மீண்டும் உயர்த் துவ தற்காக காத்திருக்கிறது. கடவுளே இங்கு நடக்கும் அராஜகத்திலிருந்து என் அன் பான நாட்டை காப்பாற் றுங்கள்," என்று பதிவிட்டுள்ளார்.