விஷால் வேட்புமனு: பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை

விஷால் வேட்புமனு: பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை

2 mins read
1bbf2db1-196f-4423-8b8c-2e3bfae1d39a
-

சென்னை: வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் மாநிலத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் முறையிட்டார். இதையடுத்து அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்காக முன்மொழிந்து பின் மறுத்த இரண்டு பேரும் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால் மனுவை ஏற்றுக் கொள் ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி யிடுவ தாக அறிவித்தார். அவரது வேட்பு மனு பரிசீலனையின்போது புதிய பிரச் சினை எழுந்தது. அவருக்காக முன்மொழிந்த 10 பேரில் தீபக், சுமதி ஆகிய 2 பேர் திடீர் எனத் தேர்தல் ஆணையத்தில் தாங்கள் விஷாலை முன்மொழியவில்லை என்று கடிதம் கொடுத்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விஷால், பின்னர் அவர்கள் மிரட் டப் பட்டதாக முறையிட்டு ஆடியோ ஒன்றை அதிகாரிகள் முன்பு தாக் கல் செய்தார். பின்னர் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதாக விஷால் பேட்டி அளித்தார். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்த பின்பு விஷால் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் கொதிப்படைந்த விஷால் இது குறித்து மாநிலத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக் கானியிடம் முறையிட்டார். இதை யடுத்து விஷாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முன்மொழிந்து மறுத்த இரண்டு பேரும் மீண்டும் தேர்தல் அதிகாரி முன்பு மாலை 3.00 மணிக்குள் முன்னிலையாகி முன்மொழிவதாக அறிவித்தால் மனுவை ஏற்றுக்கொள்வோம் என விஷாலுக்கு அறிவுறுத்தினர். ஆனால் தீபக், சுமதி இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் எனக் காக முன்னிலையாவதைவிட அவர்கள் உயிருக்கு ஆபத்தில் லாமல் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதே என் முதல் எண்ணம் என்றார் விஷால். இதனால் அவர்களை முன்னி லைப்படுத்த விஷால் தரப்பால் முடியாது போனால் வேட்பு மனு தள்ளுபடி உறுதியாகும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் நடிகர் விஷால் ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து நிலை மையை விவரித்து வருகிறார். தம் முடைய மனுவை நிராகரிக்காமல் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் விஷால் கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் அவருடைய மனு கடைசி வரையிலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாமல் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டது.