குமரி: ஓகி புயல் வீசியபோது கடலில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஆயி ரம் பேர் இன்னும் கரை திரும்ப வில்லை. இதனால் கவலையில் மூழ்கியுள்ள அவர்களின் குடும் பத்தார், மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி நேற்று ரயில் மறிய லில் ஈடுபட்டனர். சுமார் பத்தாயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு நிலவியது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, ஓகி புயலில் சிக்கிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,013 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என்று மீனவக் குடும்பங்களும் பிரதிநிதிகளும் குற்றம்சாட்டுகின்றனர். ஒகி புயல் குறித்த முறையான முன்னறிவிப்பு இல்லாததால், மீனவர்கள் கடலுக்குச் சென்றனர் என்றும், அவர்களை மீட்பதில் அரசு மெத்தனமாகச் செயல்படுகி றது என்றும் மீனவர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர்களின் குடும்பத்தார். படம்: தமிழக தகவல் ஊடகம்

