ராமேசுவரம்: யாழ்பாணம் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என இலங்கை அரசிடம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தயங்கக் கூடாது என்றார். "இந்திய மீனவர்களால் இலங்கை கடற்பகுதியில் ஓராண்டுக்கு, ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்புள்ள மீன்கள் கொள்ளை போகிறது. இதனை தடுக்காவிடில் இலங்கையின் மீன் வளம் அழிந்துவிடும்," என்று சரவணபவன் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை எம்பியின் இந்தப் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறியுள்ளார். "இலங்கை அரசைக் கண்டிக்காத அந்நாட்டு தமிழ் எம்பிக்கள், தற்போது தொப்புள் கொடி உறவான தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசியது வேதனை அளிக்கிறது," என்றார் சகாயம்.
இந்திய மீனவர்களை கைது செய்க: இலங்கை தமிழ் எம்பி ஆவேசம்
1 mins read

