ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கும் அதிமுக வுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வேட்பு மனுப் படிவங்கள் சரியான முறையில் நிரப்பப்படா விட்டால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதில் ஆச்சரியம் இல்லை என்றார் அவர். அதிமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திரு பழனிசாமி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல என்றும் உயிரைக் கொடுத்தாவது அதிமுக வெற்றி பெறவேண்டும் என்று தமது கட்சிக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவுக்குச் சாதகமாக செயல்பட்ட அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
'விஷால் மனு நிராகரிப்புக்கு அதிமுக காரணமில்லை'
1 mins read

