ஓகி புயலில் சிக்கிய 725 மீனவர்களை தேடும் பணி தீவிரம்

ஓகி புயலில் சிக்கிய 725 மீனவர்களை தேடும் பணி தீவிரம்

2 mins read

நாகர்கோயில்: ஓகி புயலில் மாய மான 725 மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. விமானம், ஹெலிகாப்டர் மூலம் அவர்களைத் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து கப்பல்கள் மூலமும் மீனவர்களைத் தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த 30ஆம் தேதி ஓகி புயல் தாக் கியது. இதனால் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந் தன. வீடுகள் இடிந்தும் மழை வெள்ளத்தில் சிக்கியும் பொது மக்கள் அவதிப்பட்டனர். குடிநீர், மின்சாரம் இல்லாமல் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. கடற்கரை கிராமங்களும் ஓகி புயலால் பேரிழப்பைச் சந்தித்தது. புயல் தாக்கும் என்று அறிவிப்பு வரும் முன்பே கடலுக்குச் சென்ற மீனவர்கள் சூறாவளிக் காற்றில் சிக்கிக்கொண்டனர். காற்றின் வேகத்திற்கு மீனவர் களின் படகுகள் ஈடுகொடுக்க முடியாமல் உடைந்து நொறுங்கின. இதனால் படகுகளில் இருந்த மீனவர்கள் கடலில் மூழ்கினர். சில படகுகள் சூறைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் குமரிக் கடல் பகுதியில் இருந்து மாயமானார்கள். இந்நிலையில் மாயமான மீனவர் களைக் கண்டுபிடிக்க இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் கேரள கடல் பகுதியில் தவித்த மீனவர் களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர். மீனவ கிராமங்களுக்கு மாநில அரசு அளித்த தகவலில் 2,124 மீனவர்கள் மீட்கப்பட்டு விட்ட தாகவும் இனி 70 மீனவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் கூறினர். ஆனால் இதனை குமரி மாவட்ட மீனவ அமைப்புகள் ஏற்க வில்லை. மாயமான மீனவர்களின் எண் ணிக்கை 2,000க்கும் அதிகம் என்றும் அரசின் அறிவிப்பில் குளறுபடி உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து மீனவ அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.