சென்னை: அதிகாலை மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த பிர பல இயக்குநர் கவுதம் மேனன் விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவரது கார் எதிரே வந்த லாரி மீது மோதியதாகக் கூறப்படு கிறது. இதில் கவுதம் மேனனின் கார் அப்பளம்போல நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் காயம் அடைந்த தம்மை அவ்வழியாக வந்த கோபாலகிருஷ்ணன் என் பவர் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்ததற்கு கவுதம் மேனன் நன்றி தெரிவித் துள்ளார். "என் நலன் விரும்பி நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி, வாழ்வைத் திருப்பிய விநாடிகள் அவை, இப்போது நலமாக இருக்கிறேன்.
உயிர் தப்பிய கவுதம் மேனன். படம்: தமிழக ஊடகம்

