'ஆளில்லா விமானம் குறித்து சீனாவிற்குத் தகவல் அளித்தோம்'

'ஆளில்லா விமானம் குறித்து சீனாவிற்குத் தகவல் அளித்தோம்'

1 mins read

புதுடெல்லி: இந்தியாவின் ஆளில்லா விமானம் சீன எல்லைக்குள் நுழைந்தது அத்துமீறிய செயல் என சீனா குற்றஞ்சாட்டி உள்ளது. இதுகுறித்து, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா விமானம் சீன எல்லைக்குள் தவறுதலாக நுழைந்துவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து சீனாவுக்குத் தகவல் தெரிவித்தோம். எனவே அத்துமீறியதாக சீனா கூறுவது தவறு," என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, வரும் 2019ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் புதிய ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.