சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள வேளையில் திமுகவின் பணிகளில் அதிக சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மட்டுமே சுறு சுறுப்பாக இயங்கி வருவதாகவும் அவ ருக்கு பக்கபலமாக கூட்டணிக் கட்சி யினர் செயல்படவில்லை என்றும் செய்தி கள் தெரிவிக்கின்றன. இதனை தமது ஆதரவாளர்களிடம் சொல்லி வருத்தப் பட்டு இருக்கிறார் மருதுகணேஷ். செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்னும் இந்தத் தொகுதிப் பக்கம் தலை காட்டவில்லையாம். மாறாக, தமது சொந்த தொகுதியான கொளத்தூர் சென்று அங்கு ஆய்வுப் பணிகளை ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாகச் சொல்லி சொந்தக் கட்சியினரே புலம்புகின்றனர்.
அதேவேளை, அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டிபோட்டுக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றர். மற்றொரு நட்சத்திர வேட்பாளரான டிடிவி தினகரனும் தமக்குக் கிடைத்த பிரஷர் குக்கர் சின்னத்தைக் காட்டி வாக்கு வேட்டையாடி வருகிறார். ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்பதோடு ஆளுநர் மேற் கொண்டுள்ள ஆய்வுப் பணிகளில் தேவையின்றி மூக்கை நுழைத்து எதிர்ப்புக் காட்டி வருகிறார் என்கின்றனர் திமுக ஆதரவாளர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதைச் சவாலாக எடுத்துக்கொள்ளாமல் கட் சிக்குத் தொடர்பற்ற பிரச்சினைகளில் ஸ்டாலின் ஈடுபடுவதாக அவர்கள் வெளிப் படையாகவே பேசி வருகின்றனர். இருப் பினும் ஸ்டாலினை எதிர்பார்க்காமலே அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலையீடு இல்லாமலேயே திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படம்: தமிழக ஊடகம்

