குஜராத் தேர்தல்: பரபரப்பான வாக்குப் பதிவு

குஜராத் தேர்தல்: பரபரப்பான வாக்குப் பதிவு

1 mins read
336507f3-2deb-4c83-ad67-1bc9e5571e75
-

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று முதல் கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் நடை பெற்றது. பிரதமராகப் பதவியேற்ற பிறகு மாநில அளவிலான வெற்றிக்காக அவர் பெரிதும் பாடுபடவேண்டிய தேர்தலாக இது அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கை வலு வடைந்து தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள வேளையில், தமது வெற்றியை நிலைநாட்டி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பாஜக வேட்பாளர்களின் சார்பில் பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி யும் அனல்பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் 68% வாக்குகள் பதிவானதாகக் இரவு 9 மணியளவில் கூறப்பட்டது. காலை முதல் பலரும் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத் திருந்து வாக்களித்ததாகக் கூறப்பட்டது. தவறாமல் வாக்க ளிக்குமாறு பிரதமர் மோடியும் திரு ராகுல் காந்தியும் வாக்காளர் களிடம் கோரிக்கை வைத்தனர்.

குஜராத் தேர்தலில் 126 வயதான சந்திரவைத்யா அஜிபென் ராஜ்கோட் மாவட்டத்தின் உப்லெடாவில் வாக்களித்தார். படம்: தமிழக ஊடகம்